Sunday, April 14, 2013

வெளிச்சம்



என் கண் எட்டும் தூரத்தில் தான்
நீ நின்றுகொண்டிருந்தாய்

உன்னை நெருங்கி விடும் எத்தனிப்புடன்
நான் நகரத்தொடங்கும் தருணம்
உன் பிம்பத்தில்
அவர்கள்
முடிச்சுகள் இடத்தொடங்கினர்

உன் மௌனம் கர்வம் என அர்த்தப்படுத்தப்பட்டது
உன் உடல் மொழியில் அலட்சியம் வழிவதாய்
அவர்கள் சொன்னார்கள்
உன் தனிமையை அதிகாரத்தின் எல்லை
என்றும் அறிவுறுத்தினர்

புதிர்விளையாட்டின் முடிச்சுகளை
கலைத்துவிடும் ஆவலுடன்
உன்னுள் பயணிக்கத் தொடங்கிய என்னை
மலர் வனம் ஒன்றின்
நகரும் சிற்றோடையின் கரையில்
கொண்டுவந்து சேர்த்துவிட்டு
நீ மௌனிக்கிறாய்

****
நன்றி:வல்லினம்.காம் .


No comments:

Post a Comment