Monday, April 1, 2013

யுகம் கடக்கும் யாத்திரை:




தடம் மாற்றி தாழ சரியும் 
என் நதி ...
சுழித்தோடும் அதன் விசித்திரங்கள்
ஓர் கன்னக்குழிவை 
ஓர் தொப்புள் சரிவை 
ஓர் யோனிதிறப்பை
ஒத்ததாய் புன்னகைக்கும்...
காலத்தின் கடைசி இழையில்
காத்திருக்கும் உன் வெம்மையில் 
கரைந்து சாகும் வரை
ஓடும் ஓடும் ...
இந்நதி..
தீரா தாகம் கொண்டு 
தீயையும் தின்று ஓடும்...

****
நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment