நாவின் பிளவிலிருந்து
தெறித்துப் பாயும் அச்சொல்
என் முகமெங்கும் கசந்து வழிய..
நீ அற்றத் தனிமையிலும்
உன் இருப்பை உறுதிசெய்யும்
அச்சொல்லின் முனை உறையும்
குருதியின் வீச்சம்
தோட்டத்து அணில் அச்சொல்லை
சுமந்துச் செல்ல முயல்கையில்
ராமனின் விரல்களில் தீ மூளும்
மலர்வனம் ஒன்று வெந்துத் தணியும்
விருப்ப உணவென எண்ணி அதை
விழுங்கிச் செரிக்க முயல்கையில்
இதயத்தை இறுக்கிப் பிழிந்து தன்
கோப்பை நிறைத்துத் திரும்பும்
பாதி அழுகிய பிணத்தினை
நாய்கள் தோண்டும் இரவில்
யோனி அறுத்து இறங்கும்
வன்மம் வடியும் அச்சொல்
*****
நன்றி:உயிரோசை.
No comments:
Post a Comment