புழுங்கும் மௌனச்சுவற்றுக்குள்
நான் தனித்திருக்கிறேன்..
நுழைய முயன்ற
மெல்லிய இசை ஒன்று
வெறுமையின் சுவற்றில் அலகு மோதிச் சரிகிறது
என் விலக்குநாட்கள் யாசிக்கும்
உன் புன்னகையின் துளி ஒன்றை,ஏனோ
நான்காம் நாளில் எடுத்து வருகிறாய்
சமாதானத்தின் கைக் கோர்க்க
ததும்பும் அட்சயப்பாத்திரம் ஒன்று
இடறிக் கவிழ்கிறது
குப்பைக்கூடையில்,
வண்ணம் வெளிறியச் சொற்சிதறல்களாய்
உடைந்த இசைக்குறிப்புகளாய்
பயன்படுத்தப்பட்ட ஆணுறைககளாய்
******
நன்றி:கீற்று.
No comments:
Post a Comment