தேர்ந்த வித்தைக்காரன் நீ
குறித்த இடத்தைப் பிசகாமல் சென்று
தைத்துவிடும் அம்பு உன் சொற்கள்
ஒரு குழந்தை கதைசொல்லியினைப் போலுன்னை
நெருங்க எத்தனித்து ஒரு திடும் தருணம்
மிக லாவகமாய் நறுக்கி எடுக்கிறாய்
என் இதயத்தின் பாகங்களை
சமயங்களில்
உன் பெயர் எழுதப்பட்ட பருக்கைகளை
எனக்கு வழங்கும் பெருந்தன்மை உனது
ஆயினும்
அதில் கொஞ்சம் உமிழ்ந்துக் கொடுக்கும்
உரிமை உனக்கு உண்டு
உன் பாதம் நக்கும் உடல் ஒன்றைக் கைவிட்டு
வெளியேறும் எனது உயிர்
இரவு பைத்தியத்தின் ஏகாந்த தனிமையில்
மிதந்து நகர்கிறதுஉன் எல்லையினை கடந்து..
******
நன்றி:உயிரோசை.
No comments:
Post a Comment