தோட்டம் பார்த்த முற்றத்தில்
நம் காலடி தடம் தேடும் சருகுகள்
இன்னும் காத்துக்கொண்டு தான்இருக்கிறது
நமக்கான தேநீர் மேசை அங்கு ...
கொதித்து ஆவியாகும் சொற்கள்
புகைபோக்கியில் மோதி உறைகின்றன
தவறாமல் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித்தருகின்றேன்
சர்க்கரையை சுமந்து செல்லும் எறும்புகள்
இம்மாலைக்குள் வீடு சென்று சேரட்டும்
நிரப்பப்படாத என் கோப்பையின் விளிம்பில்
தன் மகரந்தப்பாதங்களை பதித்துச்செல்கிறது
வழி தவறி வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று
******
நன்றி:உயிரோசை.
No comments:
Post a Comment