பெருமழைக்கால முன்னிரவுப் பொழுதொன்றில்
உறைந்த உதடுகளோடு
நீ என் வீடு வந்தாய்
சிக்கித்தவிக்கும் வார்த்தைகள் உண்ண
வெம்மை சமைத்த உதடுகள் கேட்டாய்
உடல்கள் குவிந்து கரைந்து
உதடுகள் மட்டுமே எஞ்சிய
ஒளி கசியும் இருள் பொழுதில்
தவித்துச்சிறகடிக்கும் ஜன்னல் வழி
ஒற்றை எழுத்துச்சொல் ஒன்று
வெட்கிச் சிவந்து வெளியேறும்
முத்துக்குளிப்பவனின் ஆவல் எனக்கு
அருவி மீனின் பாய்ச்சல் உனக்கு
நீ நான் அற்ற
நாம் இவ்வுலகை கைவிட்ட தருணம்..
வெளியே மழை வலுத்திருந்தது.
*****
நன்றி:உயிரோசை.
No comments:
Post a Comment