Sunday, July 21, 2013

விடுபடுதலின் நீள் பாதை






ஈக்கள் மொய்க்கும் உன் இறந்த புன்னகையை 
என் வாசல் மாக்கோலத்தில் கிடத்திச்செல்கிறாய் 

ஓர் வானவில் காலத்தில் நீ பரிசளித்த 
இளம் சிவப்பு முத்துமாலையை 
விறைத்து வீங்கிய உன் புன்னகைக்கு 
அணிவித்து அழகுபார்க்கிறேன் 

இடுகாட்டு வழி எங்கும் இறைத்துச்செல்ல 
நிறம் கப்பிய மலர்களை 
நம் தேநீர் மேசைக்கு அடியிலிருந்து 
சேகரித்து  வந்திருக்கிறேன் 

புதைத்தலைக் காட்டிலும் எரித்தல் நலம் 

துடைத்தும் தீராத புகைமூட்டம் 
கவ்விச் சூழும் இப்பாதை மறுத்து  
எதிர் திசை நகரும் 
ஒற்றை நிலவு.

****
நன்றி : கீற்று இணைய இதழ் .

No comments:

Post a Comment