வன்மத் தீ பறக்க
சொற்களை
கூர்தீட்டிக்கொண்டிருக்கிறாய்
இயந்திரம் தயாரித்து துப்பும்
இன்னொரு இயந்திரத்தை ஒத்த அவைகள்
கனகச்சிதம்
என்னிடம் இருப்பதெல்லாம்
மெலிந்த தூரிகையும்
ஈரம் மின்னும் வர்ணங்களும் தான்
என்னை எதிர்கொள்ள அழைக்காதே
நிழல் கொதிக்கும் உனது போர்க்களத்தில்
***
செ .சுஜாதா.
No comments:
Post a Comment