Wednesday, May 8, 2019

சூல் கொண்ட மேகத்தின் மௌனம்
அடர்ந்துகொண்டே போகிறது
இனி எந்நேரத்திலும்
பனிக்குடம் உடைந்து
அழுகுரல் கேட்கலாம்
சாக்கடைப் புணர்ந்து கொல்லும்
என்றறிந்தபின்பும்

என் தூய மழையே!
இப்பெருநகரில்
இன்னும்
ஏன் பொழிந்துகொண்டிருக்கிறாய்?!

Tuesday, May 7, 2019

மழையால் மட்டுமே முடிகிறது

இதழ்களில் அத்தனை மௌனத்தையும்
இதயத்தில் அத்தனை இரைச்சலையும்

ஒரே சமயத்தில் தந்துவிட..

Monday, May 6, 2019

மௌன மழை



தூமைகாலப் பெண்ணாய்
மேகம்
மெல்லக் கசிந்து கொண்டிருக்கிறது