Tuesday, September 1, 2015

சொற்கள் உறங்கும் காடு


ப்ரொபசர் கடத்தப்பட்டதோடு
புத்தகத்தை மூடிவைக்கிறேன் 

பரபரப்பு நிமிடத்தில்
வாகனம்
உறைந்து நின்றுவிட
பதற்றம் கொள்கின்றனர்
கடத்தல்காரர்கள் 

ப்ரொபசர்
நிதானமாக
புகை இழுக்கிறார் 

அவரின் குறுந்தாடி
மெள்ள கன்னம் ஏறுகிறது 

அடிவயிற்றில்
மின்னலொன்று முட்டுகிறது
கடத்தல்காரர்களுக்கு 

வாரம் கடந்து
புத்தகத்தை திறக்கிறேன் 
'ஒரு சிகரெட் கிடைக்குமா ?'
என்கிறார் ப்ரொபசர் 

வாகனத்தின் கதவு திறந்து
அவசரமாய் ஓடுகின்றனர்
கடத்தல்காரர்கள்
ஒரு சின்ன முறைப்புடன்

ரத்தினக்கற்கள் பற்றிய
ரகசியங்கள்
ஒரு மூலையில் கிடக்கின்றன
கேட்பாரற்று 

****
நன்றி : சிலேட்டு இதழ் 

1 comment:

  1. நைஸ்! மிளிர்கல்லை படிச்சுட்டு எழுதின கவிதை இது, ஆம் ஐ கரெக்ட் சுஜாதா? :)

    ReplyDelete