நாளைக் காதலர் தினம் . நண்பர் ஒருவர் பேசும்போது கேட்டார் நீங்க இதுவரை யாரையும் காதலித்ததே இல்லையா?! ச்சே வாழ்க்கையே வீண் என்றார். என்னைப்பொறுத்தவரை நேசிக்கத் தெரிந்த யாருக்கும் வாழ்க்கை வீண் இல்லை.
நேசம் என்பது என்ன ? நீ எட்டி உதைத்தாலும் உன் காலடியில் கிடப்பேன் என்னும் அடிமைத்தனமா அல்லது நீ எனக்கானவன், என் சொல் தாண்டி நீ யோசிக்கக் கூடாது என்று தலைமேல் அமர்ந்துகொண்டு ஆட்டிவைக்கும் திமிரா? கையை கிழித்துக்கொள்வதும், சூடுபோட்டுக்கொள்வதும், நெஞ்சில் பசைக்குத்திக்கொள்வதும், தொலைபேசியில் துரத்துவதும் அல்ல நேசம்.
சுய கவுரவத்தை, விருப்பத்தை, தனித்தன்மையை இழந்துவிடாமல் ஒருவரின் நேசத்தைப் பெறமுடிந்தால் அங்கே வாழ்வு அர்த்தப்படுகிறது. நேசம் நிரூபணங்களைக் கோராதது. நிபந்தனைகள் அற்றது. அது ஒரு பட்டாம்பூச்சி.
நாம் அனைவரையும் நேசிப்போம். எதிர்படும் அத்தனை உயிர்களுக்கும் புன்னகையை பரிசளிக்க நாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நேசம் என்பது நேசித்திருத்தல் மட்டுமே.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment