இன்றும்
அதே தனிமை
மேல்மாடிக்கண்ணாடி வழியே
இறங்கும்
வெயில்
இவ்வீட்டை இன்னும்
பெரிது படுத்திக் காட்டுகிறது
புத்தக அலமாரியில்
எட்டுக்கால்பூச்சி
அசைவற்று.
துருவப்பிரதேசத்தின் குளிர்
மயிர்க்கால்களை
துளையிடத்தொடங்குகிறது
புகுந்து கொள்கிறேன்
வழக்கமாக அணியும் கருப்பு கோட் தான்
கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது
அதன் நிறம்
***
செ.சுஜாதா.
நன்றி: சொல்வனம்.காம் [100 வது இதழ்]
No comments:
Post a Comment