என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
Thursday, May 17, 2018
நம் சந்திப்புகள் முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிகின்றன. முதல் முத்தமும் கடைசி முத்தமும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை.
பிரிவு நிமித்தம் இடப்படும் முத்தம் வலையில் சிக்கிய மீனைப்போல துள்ளித்தவிக்கின்றது.
உன்னை உடன் எடுத்துச்சென்றுவிடும் ஆவலாதியுடன் அல்லது உனக்குள் ஒளிந்துகொண்டுவிடும் படபடப்புடன் இதழ்களுக்குள் பாய்ந்து இறங்குகின்றேன்.தின்று தின்று தீராப்பசியுடன் திரும்ப நேர்கையில்
ஒரு ஒட்டகத்தைப்போல உன் இதழ்நீரை என் பயணத்திற்கென்று சேர்த்துக்கொள்கிறேன்.உதடு,மூக் கு, கன்னம்,காது,கழுத்து,தோள்பட்டை, உள்ளங்கை என்று நகர்ந்து விரல் நுனியில் நழுவி விழும் என் முத்தம் இறுதியில் கண்களைப்பற்றிக்கொண்டு கதறத்தொடங்குகிறது.
Subscribe to:
Posts (Atom)